பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் விஷேட கூட்டம்.
பேருவளை சீனன் கோட்டை பெருகமலைஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான விசேட கூட்டமொன்று மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸாவின் எதிர் கால வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் பற்றி ஆராயும் முகமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.மேற்படி குர்ஆன் மத்ரஸாவின் மேற்பார்வை குழு தலைவரும்,அப்பள்ளி நிர்வாக உறுப்பினருமான அல்,ஹாஜ்,பீ.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் மௌலவி எஸ்.எச்.எம்.இம்ரான்(ஹுமைதி), உப அதிபர் மௌலவி முஹம்மத் லியாஉல் ஹக்(பாரி)மற்றும் விரிவுரையாளர் மௌலவி முஹம்மத் ஹாரிஸ் ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தினர்.
200 மாணவர்கள் வரை குர்ஆனை கற்று கொள்ளும் மேற்படி மத்ரஸா சகல துறைகளிலும் சிறந்து விளங்குவதுடன் பழைய மாணவர்கள்,பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.சீனன் கோட்டை பள்ளிச்சங்க குர்ஆன் மதாரிஸின் கீழ் இயங்கும் இந்த மத்ரஸாவை மேலும் கட்டியலுப்ப பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு தரப்படும் என கூட்டத்தில் உறுதி மொழியளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மத்ரஸாவின் நிர்வாக குழு உறுப்பினர்களான அல்,ஹாஜ்.இர்பாத் நிஸாம்,ஜனாப் ஸயான் முனீர்,அல் ஹாஜ்.இஷாக் ஆகியோர் கலந்து கொண்டார் . சீனன் கோட்டை மதாரிஸின் கீழ் உள்ள மதரஸாக்களில் இந்த மத்ரஸா முன்னனி மத்ரஸாக்களில் ஒன்றாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவலளை பீ.எம்.முக்தார்)