உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய குடியரசு முன்னணி வெகுவிரைவில் எழுச்சி பெறும்; இளைஞர் பிரிவின் இணைப்பாளர் மர்சூக் என் முஹம்மட்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க நாட்டு மக்கள் அனைவரும் இன, மத மற்றும் மொழி பேதமின்றி எம்முடன் கைகோர்க்க வேண்டும். சிறந்த தலைமைத்துவத்தின் கீழான சிறந்த செயற்பாட்டு குழுவினர் எம்மிடம் உள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய குடியரசு முன்னணி வெகுவிரைவில் எழுச்சி பெறும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் பிரிவின் இணைப்பாளர் மர்சூக் என் முஹம்மட் குறிப்பிட்டார்.

சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் வருடாந்த தேசிய மாநாட்டில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

இம்மாநாட்டில் கதாநாயகனாக வீற்றிருக்கின்ற எமது ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்,முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களை விழித்து,இந்நிகழ்வில் கட்சியின் ஆதரவையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ள குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகை தந்துள்ள கட்சியின் ஆதரவாளர்களை விழித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

நாங்கள் கடந்த காலங்களில் பட்ட துயரங்களை மறந்து விட முடியாது. கடந்த காலங்கள் இன்னும் நினைவில் உள்ளன. வரிசையில் நேரத்தையும், காலத்தையும் வீணடித்தோம். வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஆக்கிரமித்துள்ளது.

எமக்காக புதியதொரு தலைவர் சிறந்த கொள்கையை கொண்டு எதிர்கால தலைமுறையினருக்காக இந்தக்கட்சியை ஆரம்பித்துள்ளதாக இவ்விடத்தில் உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். கிழக்கு மாகாணத்திலும் ஐக்கிய குடியரசு முன்னணி வெகுவிரைவில் எழுச்சிப்பெறும் என்பதை இந்த மாநாட்டில் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

கடந்த கால பிரச்சினைகளை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அந்த பிரச்சினைகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்த வேண்டும். எத்தனை குளறுபடிகள், இனவாத போராட்டங்கள், இவற்றை ஒருபோதும் மறந்து விட முடியாது. ஆனால் இவற்றையெல்லாம் மறுதழிக்கும் வகையில் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய குடியரசு முன்னணி உதயமாகியுள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் இந்த மாநாட்டில் பெருமளவிலானோர் கலந்துக் கொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.இந்த கட்சி அனைவருக்கும் முன்னுரிமை வழங்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எமது தலைவருக்கும், இளைஞர் விவகாரத்துக்கு பொறுப்பாக உள்ள தீக்ஷன கம்மன்பிலவுக்கும் இந்த இடத்தை வழங்கியமைக்காக அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த மாநாட்டில் சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்காக சிங்கள மொழியில் உரையாற்றுகிறேன்..

இந்த நாடு பொருளாதார பாதிப்பினால் வங்குரோத்து நிலையடைந்துள்ளது. முதலில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு இன, மத மற்றும் மொழி பேதமின்றி நாட்டுக்காக அனைவரும் ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஒன்றிணைய வேண்டும். சிறந்த தலைமைத்துவத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு எம்மிடம் செயற்திட்டங்கள் உள்ளன.

அத்துடன் திட்டங்களை செயற்படுத்த எம்மிடம் சிறந்த குழுவினரும் உள்ளனர். ஆகவே எம்முடன் இணையுங்கள் என்று மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன். கடந்த கால தவறை இம்முறையும் செய்ய வேண்டாம். கட்சிக்கும், சிறந்த தலைமைத்துவத்துக்கும் முன்னுரிமை வழங்குவோம். ஆகவே எம்முடன் கைகோருங்கள். தேசிய வெற்றிக்காக ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஒன்றிணைவோம். என ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் பிரிவின் இணைப்பாளர் மர்சூக் என் முஹம்மட் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *