பாசாலைகளில் இஸ்லாமிய புதுவருட தினத்தை (முஹர்ரம்) நினைவு கூறும் நிகழ்வுகள்.
இஸ்லாமிய புதுவருடமான புனித முஹர்ரம் மாதத்தின் முதல் தினத்தில் முஸ்லிம் பாசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதுவருட தினத்தை வரவேற்கும் நல்லுபதேசங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துமாறு கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையானது அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையானது முஸ்லிம் சமய கலாச்சார இ பாரம்பரிய விழுமியங்களுக்கு ஏற்ப மாணவர்களின் தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்வதனூடாக பரந்த கல்வி இலக்கை அடைய முற்படல் எனும் தூர நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.
அதற்கமைய முஸ்லிம்கள் தங்களது சமய நடிக்கைகளுக்காகப் பின்பற்றும் இஸ்லாமிய கலண்டிரின் முதல் மாதமாக புனித முஹர்ரம் காணப்படுகின்றது. இம்மாதத்தின் முதல் தினத்தை (தலைப்பிறை) இஸ்லாமிய புதுருடமாக முஸ்லீம்கள் நினைவுபடுத்துவார்கள். அதனடிப்படையில் எதிர்வரும் 09.07.2024 ஆம் திகதி முஹர்ரம் ஆரம்பிக்கின்றது.
மேலும் இந்நிகழ்வுகளில் இஸ்மாமிய மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தினத்தில் இலங்கைத் தாய்நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், பொருளாதார முன்னேற்றம், கூபீட்சம், ஐக்கிய , சௌபாக்கியம் வேண்டி பிராத்திக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.