விளையாட்டு

அல் ஹமாஸ் ரோயல் அணி சம்பியன்

ஹொரவப்பொத்தான நிக்கவெவ விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் அல் – ஹமாஸ் றோயல் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

நிக்கவெவ விளையாட்டு மைதானத்தில் கடந்த (02) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல் – ஹமாஸ் றொயல் அணி அங்குநொச்சி றைஸ் ஸ்டார் அணியை வீழ்த்தியது.

இந்தத் தொடரில் 30 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.தொடரின் ஆட்ட நாயனாகவும் இறுதிப் போட்டியில் சிறந்த வீரராகவும் அல் – ஹமாஸ் றோயல் அணியைச் சேர்ந்த சிலிங்கா பாணியில் பந்து வீசி மாலிங்கவை  ஈர்த்துள்ள  எப்.மொஹமட் பைனாஸ் தெரிவானார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *