தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயது கபடி அணியினர்..!
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட முதலாவது கடற்கரை சம்பியன்ஷிப்-2024 போட்டிகள் திருகோணமலை கடற்கரை மைதானத்தில் (9) நடைபெற்றது.
நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை முதல்வர் ஏ.அப்துல் கபூர் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில்
இப் போட்டிகளில் பங்குபற்றிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயதுப் பிரிவு கபடி அணியினர் தங்கப் பதக்கம் வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
