உள்நாடு

உம்மு ஸாவியாவில் உலமாக்கள், மாணவர்களுக்கான விஷேட கலந்துரையாடல்.

கொழும்பு உம்மு ஸாவியாவில் பாணந்துறை தொட்டவத்தையைச் சார்ந்த சாதாரண தரப் பரீட்சை (O/L) , உயர்தரப் பரீட்சை (A/L) எழுதிய மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அகீதா சம்பந்தமான விடயங்களும், தொழில் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டன.

பாணந்துறை தொட்டவத்தை ஷாதுலிய்யா மாணவர் அமைப்பு மற்றும் உம்மு ஸாவியாவின் நிர்வாகத் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் மக்கி ஹாஷிம் அவர்களின் வழிகாட்டலின் கீழ், உம்மு ஸாவியாவின் நிர்வாக சபை ஆகியன இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உம்மு ஸாவியாவில் இயங்கும் அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி முதல்வர் கலீபதுஷ் ஷாதுலி அல் உஸ்தாத் அஹ்மத் ஸூபி (மஹ்ழரி) , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ் ஆகியோர் இக்கருத்தரங்கில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


(பேருவளை பீ.எம் முக்தார்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *