உள்நாடு

நாட்டில் ஏற்பட்ட அரகலய, நாடு தொடர்பிலும் அபிவிருத்தி விடயத்திலும் சிந்திக்க தூண்டியுள்ளது..! -பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்ததோ இவ்வாறு இலங்கையில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசணை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக ஆரம்பகட்டமாக இரண்டு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்து குறித்த கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதற்காக 2024.06.10 ஆம்திகதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவிட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், தான் பதவியேற்ற காலத்தில் கொரோனா என்றும் பொருளாதார நெருக்கடிஎன்றும் பல்வேறு தடைகள் வந்து அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்த முடியாது போனதாகவும் தற்போது அவ்வாறான நிலை மாறி அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவைகளை முன்னெடுக்க முடியுமானவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் அவர்களும் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ. சம்சுதீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான ஏ.எம். அசாம் மெளலவி உள்ளிட்டவர்களுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், பிரதி அதிபர்களான திருமதி குறைசியா றாபிக், றின்ஷா பர்வின், உதவி அதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இங்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *