உள்நாடு

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் பெருந்தொகை நிதியுதவி..!

காஸா அப்பாவிகளுக்காக உதவும் வகையில் ஜனாதிபதி ரணில் அறிவித்த Gaza Children’s Fund நிதியத்திற்க்கு கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு CDMF சுமார் 2 கோடி 72 லட்சங்கள் (27,268,592) கூட்டமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்டீன் தமைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவிடம் வழங்கப்பட்டது.

 

திரட்டப்பட்ட நிதி விவரங்கள்:

(1) தெஹிவளை-மவுண்ட் லவினியா ரூ.9,012,640/-

(2) கிருலப்பன- ரூ.1,000,000/-

(3) பெட்டா (மத்திய) – ரூ.1,325,000/-

(4) அளுத்கட – ரூ.1,014,337/-

(5) மருதானை- ரூ.1,246,510/-

(6) தெமட்டகொட – ரூ.660,800/-

(7) கொளன்னாவ பிரிவு – ரூ.2,527,475/-

(8) கொழும்பு வடக்கு – ரூ.2,044,000/-

(9) கிராண்ட்பாஸ் – ரூ.1,519,440/-

(10) கொம்பணி தெரு – ரூ.1,100,190/-

(11) கொள்ளுப்பிட்டி – ரூ.1,260,200/-

(12) மாலிகாவத்தை – ரூ.4,000,000/-

(13) ஏனைய நன்கொடையாளர்கள் – ரூ.558,000/-

நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு கோரிக்கை!

இந்த நிதி ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைப்பாட்டு நிறுவனம் (UNWRA) போன்ற தகுந்த நிறுவனங்கள் மூலம் காசா குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என CDMF கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த நன்கொடைகளைக் கண்காணிப்பதற்கும், பாலஸ்தீன் மக்களின் நலனுக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு பாலஸ்தீன் தூதரகத்தையும் CDMF இனுடைய தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.ஸிராஷ் நூர்டீன் அவர்கள் பாலஸ்தீனுக்கான இலங்கை தூதுவரை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இஸ்ரேலால் பாதிக்கப்படும் பாலஸ்தீன் மக்களின் துன்ப நிலை குறித்தும், குறிப்பாக அங்குள்ள குழந்தைகள் சந்திக்கின்ற கொடுமைகள் குறித்தும் இலங்கை முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகளாக பார்க்கப்படுகிறார்கள். போர், வன்முறை என்பவற்றால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் மீது இயல்பாகவே இரக்கமும் கவலையும் ஏற்படும். குழந்தைகள் பாதிக்கப்படும் போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கும்.

இஸ்ரேலால் பாலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அநீதியானது என்று இலங்கை முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இந்த அநீதியை எதிர்த்து போராடுவதும், பாலஸ்தீன் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது. மேற்கூறிய காரணங்களால், பாலஸ்தீன மக்களுக்காக குறித்த நிதி சேகரிக்க பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *