ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க 20 மில்லியன் ரூபா வழங்கும் சீனா..!
நாட்டின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காக சீனா 3000 ஸ்மார்ட் பலகைகளை வழங்கவுள்ளது. இதற்காக சீனா இலங்கைக்கு 20 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கவுள்ளது.
இந்த 20 மில்லியன் ரூபா உதவி வழங்கும் ஒப்பந்தம் மிக விரைவில் கல்வி அமைச்சுக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் சீனா 1500 ஸ்மார்ட் பலகைகளை பொருத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கும். இதன்மூலம் 3000 பாடசாலைகள் நன்மை பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
இதற்கு மேலதிகமாக தொலைதொடர்பு ஆணைக்குழு 1500 ஸ்மார்ட் பலகைகளை 1250 பாடசாலைகளுக்கு வழங்க உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஆரம்பிப்பதற்காகவே இந்த உதவி வழங்கப்பட இருக்கின்றது. பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த வசதிகள் செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதற்குத் தேவையான ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு ஒன்லைன் மூலம் இந்த வசதி வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.