ரிச்பெர்ரி வெற்றிக்கிண்ணம் ஏறாவூர் இளம்தாரகை வசமானது.
ரிச்பெர்ரி நிறுவனம் காத்தான்குடி உதைப்பந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட பலம் பொருந்திய காற்பந்தாட்ட சுற்றுத் தொடரின் சம்பியனாக ஏறாவூர் இளம்தாரகை (yssc) விளையாட்டு கழகம் மகுடம் சூடியது.
இவ் இறுதிப்போட்டி காத்தான்குடி விக்டரி விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) மின்னொளியில் இடம்பெற்றதோடு இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு லைட்ஹவுஸ் விளையாட்டு கழகமும் மூன்றாவது இடத்தினை ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(உமர் அறபாத் -ஏறாவூர் )