கிழக்கு அமைச்சுகளின் செயலாளர் பதவிக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படாமை ஏன்..? -புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிமும் கூட நியமிக்கப்படாமை ஏன் என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது பற்றி தெரிய வருவதாவது,
கிழக்கு மாகாண ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களில் இரண்டு அமைச்சுக்களுக்கான செயலாளர்களாக இரண்டு சிங்கள இனத்தவரும் மிகுதி மூன்று அமைச்சுக்களின் செயலாளராக மூன்று தமிழ் இனத்தவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்ற தகுதியான முஸ்லிம் அதிகாரிகள் இருந்தும் ஒரு முஸ்லிம் இனத்தவரும் நியமிக்கப்படாமை என்பது கிழக்கு முதலமைச்சரின் முஸ்லிம் விரோத போக்கா என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பதவிகளுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கான காரணம் என்ன ?
கிழக்கு மாகாணத்தில் இலங்கை நிருவாக சேவையில் (SLAS) தகுதியானவர்கள் இல்லையா ?
ஆகவே இது பற்றி கௌரவ ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் படி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.
முஸ்னத் முபாறக்
செயலாளர்.
புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்