இஸ்ரேல் விவகாரத்தில் மாலைதீவின் துணிச்சல் மிக்க தீர்மானம்.
தொழிலை பிரதான வருமானமாக கொண்டுள்ள நாடு மாலைதீவு ஆகும். தனது நாட்டிற்கு இஸ்ரேலியர்கள் வருவதனை தடை செய்து மாலைதீவு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களுக்கு தொடராக இழைத்து வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக மாலைதீவு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
காஸாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மிருகத்தனமாக ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகின் மிகச்சிறிய இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மாலைதீவு துணிச்சல் மிகு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. ஜனாதிபதி முகம்மத் முஈஸு இஸ்ரேலின் கடவுச்சீட்டினை கொண்டிருப்பவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளார்.
ஜனாதிபதி முஈஸு பலஸ்தீனுக்கு உதவுவதற்காக தேசிய நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். மாலைதீவு அரசின் இத்தீர்மானம் அந்நாட்டு எதிர்கட்சி தனது முழுமையான ஆதரவுடனேயே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மாலைதீவுக்குள் இருக்கும் இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு மாலைதீவு அரசு கட்டளை பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷ், புரூணை, ஈரான், ஈராக், குவைத், லெபனான், லிபியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சிரியா மற்றும் யமன் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலைதீவின் இத்தீர்மானம் முன்மாதிரிமிக்கது.
இஸ்ரேலுடன் தொடர்ந்து உறவுகளை பேணி வரும் அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு இத்தீர்மானம் ஒரு பாடமாக அமையும். முஈஸு அரசு திட்டத்தை எடுப்பதற்கான அழுத்தத்தை அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர் வழங்கியிருந்தார். பிரதான எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவரான மைக்கல் அகமட் நசீம் மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் பிரவேசிப்பதற்கு தடை செய்யும் வகையில் குடிவரவு சட்டத்தை திருத்தும் வகையில் சமர்ப்பித்திருந்தார்.
மாலைதீவுக்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் உல்லாச பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் சுமார் 11 ஆயிரம் பேர் இஸ்ரேலிய பிரஜைகளாவார்கள். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 11 ஆயிரம் இஸ்ரேலியர்கள் உல்லாசப் பயணிகளாக மாலைதீவுக்கு வருகை தந்துள்ளனர். இந்தப் பின்னணியிலும் கூட மாலைதீவு இத் தீர்மானத்தை நிறைவேற்றி முன்மாதிரி காட்டியுள்ளது மாலைத்தீவின் இத்தீர்மானமானது இஸ்ரேலுடன் கெஞ்சிக் குழாவிச் செயல்படும் சிறந்த முன்மாதிரியாக உள்ளது. உலகின் மிக சிறிய நாடான மாலைதீவு காட்டியிருக்கிற இந்த முன்மாதிரி பாராட்டுக்குரியது.