உலகம்

ஆகஸ்டில் இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஷ்டிரபதி பவனில் இருவரும் சந்தித்துப் பேசியதுடன், ​​இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை தலைநகர் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இருவரும் இந்திய பிரதமரின் விஜயம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *