மத்திய மாகாணத்தில் டியூசன் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைககள்
பாடசாலையில் கற்கும் மாணவர்களை தனது டியூசனில் வரவழைத்து பணம் திரட்டி கற்பிக்கும் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைககள் மத்திய மாகாணத்தில் தீவிரமடைந்துள்ளன.
இதுவரை இவ்வாறான 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனக ஹேரத் தெரிவித்தார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு இணங்க இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கும் திட்டத்திற்காக கல்வி அமைச்சு விசேட செயற்குழு ஒன்றையும் நியமித்துள்ளது
மத்திய மாகாண பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமானதாகவும் உச்ச பயனை மாணவர்களுக்கு வழங்கக்கூடியதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே இத்திட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
(ரஷீத் எம். றியாழ்)