ஷாதுலிய்யா ஆன்மீக தலைவரை ஜித்தாவில் சந்தித்த சீனன்கோட்டை இஹ்வான்கள், முக்கியஸ்தர்கள்.
பேருவளை சீனன்கோட்டையில் இருந்து இம் முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவுக்கு சென்றுள்ள ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியஸ்தர்கள், இஹ்வான்கள் ஷாதுலிய்யாத் தரீக்காவின் உலக ஆண்மிக தலைவர் மர்ஹூம் செய்ஹூஸ் ஸஜ்ஜாதா அஷ் செய்ஹ் அஜ்வாத் அப்துல்லாஹ் அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி (ரஹ்) அவர்களின் புதல்வரான சங்கைக்குரிய அஷ் செய்ஹ் முஹம்மத் அஜ்வாத் அல் பாஸி நாயகம் அவர்களை ஜித்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
சீனன்கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி-பீ.ஏ.) அக்கலாபீட இணைப் பொருலாளர் அல்-ஹாஜ் மிஸ்ராஜ் மதீன்,அல்-ஹுமைஸ்ரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க முக்கியஸ்தர் அல்-ஹாஜ் அப்ராஸ் அப்துல்லாஹ்,சீனன் கோட்டை பாஸியா பெரிய பள்ளிவாசல் பிரதம முஅத்தின் அல்-ஹாஜ் ஸஹ்ரான் முர்ஸி,சமூக சேவையாளர் அல்-ஹாஜ் ரவ்ஸான் முர்ஸி ஆகியோர் இச் சந்திப்பில் பங்கு பற்றினர்.
சங்கைமிகு சேஹ் நாயகம் அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனது ஸலாத்தையும் ஏத்தி வைத்துள்ளார். இலங்கை நாட்டின் சாந்தி,சமாதானம்,சுபீட்சத்திற்காகவும் இதன் போது பிரார்த்தனை செய்துள்ளார்.
ஷாதுலிய்யாத் தரீக்காவின் செயற்பாடுகள் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இவர்களிடம் விணவியுள்ளார். தான் பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்ததையும் இஹ்வான்கள் அளித்த வரவேற்புகளையும் நன்றியுடன் நினைவு கூறியுள்ளார்.
மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் இக்குழுவினர் செய்ஹு நாயகத்தை இதன் போது கேட்டுக் கொண்டுள்ளனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)