லெபனான்மீது போர் தொடுப்போம்..! -நெதன்யாஹு அறிவிப்பு; அங்கே உங்களுக்கு சமாதி கட்டுவோம்..! -ஹஸன் நசுருல்லாஹ் பதிலடி [இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் : 241 -ம் நாள்]
வடக்கு இஸ்ரேல் நகரங்களை ஹிஸ்புல்லா போராளிகள் வேட்டையாடி வருவதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். ஹிஸ்புல்லாவின் வீரிய தாக்குதலில் வடக்கு சிறையில் உள்ள பல நகரங்கள் தீப்பற்றி எரிந்து வருவதையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். நகரங்களில் எரியும் இந்தத் தீயை மேலும் வேகப்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லா போராளிகள் வடக்கு இஸ்ரேலிலுள்ள காட்டுப் பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தீ விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து அதிவேகமாக பிற பகுதிகளுக்கும் பரவி வருவதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இரவு பகலாக முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தக் காட்சியை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த வடக்கு இஸ்ரேலும் பற்றி எரிகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலோடு நின்றுவிடாமல் வடக்கு இஸ்ரேலை நோக்கி முன்னேறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பல நகரங்கள் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நிறுத்தும் வரை எங்கள் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்று ஹிஸ்புல்லா போராளி குழு அறிவித்துள்ளது. வடக்கு காஸாவிலுள்ள இஸ்ரேல் வான் பாதுகாப்பு சாதனமான அயன்டோம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
தகவல் தொடர்பு டவர்கள் சரிந்து கொண்டிருக்கின்றன. வீடியோ காமிராக்கள் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. ஹிஸ்புல்லாவின் இந்த அதிபயங்கர தாக்குதலுக்கு அஞ்சி இஸ்ரேலிய படைகள் வடக்கு இஸ்ரேலிலிருந்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். தாக்குதலின் தீவிர தன்மையை உணர்ந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு வடக்கு இஸ்ரேல் பகுதிக்கு விஜயம் செய்து சேதார விவரங்களை நேரில் அறிந்து வருகிறார். அங்கிருந்த இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்து ஹிஸ்புல்லாவை எதிர்த்து இறுதி வரை போரிடுமாறு ஊக்கமூட்டியுள்ளார். இச்சூழலில் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட்டுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வடக்கு இஸ்ரேலின் படைத் தளபதியை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தார். வடக்கு இஸ்ரேலின் தோல்விக்கு தான் மட்டும் பொறுப்பா? அல்ல. அனைவரும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட இஸ்ரேல் தளபதி நெதன்யாஹுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு இஸ்ரேலில் நிகழ்ந்துள்ள சேதாரங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத இஸ்ரேலிய பிரதமர் லெபனான்மீது போர் தொடுக்கப் போவதாக அறிவிப்பு செய்துள்ளார். வடக்கு இஸ்ரேல் அழிந்து வருவதை நாங்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். லெபனான்மீது ஒரு முழுபோர் தொடுக்கப்படும் என்று ஆத்திரத்தில் அறிவிழந்து ஆவேசமாக கூறினார். இவரது இந்த வீராப்புக்கு பதில் கூறும் வகையில் ஹிஸ்புல்லா தலைவர் அசன் நசுருல்லா நீங்கள் லெபனானுக்கு வந்தால் அங்கே உங்களுக்கு சமாதி கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் உச்சிக்கு எட்டுமளவுக்கு உறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏவுகணைகள் ஒட்டுமொத்த இஸ்ரேலையும் காவு கொள்வதற்காக லெபனானில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஹிஸ்புல்லா போராளிகள் பட்டனை தட்ட வேண்டியதுதான் பாக்கி. ஒட்டுமொத்த இஸ்ரேலும் எரிந்து சாம்பலாகிவிடும் என்று ஹிஸ்புல்லா போராளிகள் கடும் எச்சரிக்கை விட்டுள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் பயங்கர குண்டுவெடிப்பு;
ஒட்டுமொத்த ராணுவ முகாம் கலாஸ்
ஹிஸ்புல்லா போராளிகளின் தாக்குதலினால் வடக்கு இஸ்ரேல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய தினம் தெற்கு இஸ்ரேலில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு இஸ்ரேலிலுள்ள நெகேவ் ராணுவ முகாம் சுக்கு நூறாக உடைந்தது. அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் ‘‘ஐயோ…. அம்மா….’’ என்று அலறி அடித்துக் கொண்டு நாளா திசைகளிலும் ஓட்டம் பிடித்தனர். ஏராளமான ராணுவ சாதனங்கள் எரிந்து சாம்பலாகியது. ஆட்கள் சேதம், பொருட்சேதம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதைப் பற்றி இஸ்ரேலிய ராணுவ தளபதி ஹெவேலி கூறுகையில் இது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு அசாதாரண சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நீங்கள் எங்கள் நகரங்களை எரித்தால் நாங்கள் உங்கள் நகரங்களை எரிப்போம் என்று ஹமாஸ் போராளிகள் கர்ஜனை செய்துள்ளனர். ‘அடிக்கு அடி’ என்ற அரிச்சுவடியை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு போதித்து வருகின்றனர். காஸாவுக்குள் காலைவிட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் செத்து மடிகின்றனர்; தப்பி ஓடுகின்றனர். படுகாயமடைந்து ஹெலிகாப்டரில் தூக்கி செல்லப்படுகின்றனர். இதுதான் காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நிலையாக இருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் அழிந்து வருவதைப் பற்றியோ நாடு அழிந்து வருவதைப் பற்றியோ இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு கவலைப்படுவதாக தெரியவில்லை. ‘‘நாடு சுடுகாடானாலும் அங்கேயும் நான் பிரதமரின் நாற்காலியில்தான் அமருவேன்’’ என்று முரண்டுபிடித்து வருகிறார். ‘சுடுகாடு பிரதமர் நெதன்யாஹு’ என்று இஸ்ரேல் வரலாற்றில் இவர் அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தொடரும்…
(கே.டி. கிஸர் முஹம்மது)