உலகம்

ஹிஸ்புல்லாமீது போர் தொடுத்தால் இஸ்ரேல் அழியும்..! -இஸ்ரேல் ராணுவ தளபதி எச்சரிக்கை!

லெபனான்மீது போர் தொடுத்து ஹிஸ்புல்லாவை முற்றிலும் அழிக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹுவும் பாதுகாப்பு அமைச்சர் கேலண்டும் கூறிவந்ததை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். ஹமாஸிடமும் இஸ்புல்லாவிடமும் வாங்கிய அடியில் இஸ்ரேல் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் மூளை குழம்பிபோய் இருப்பதாக தெரிகிறது. என்ன செய்வது என்று அறியாமல் ஆத்திரத்தில் உளறி கொட்டி வருகின்றனர். இவர்கள் இஸ்ரேலை ஒரு அழிவு பாதைக்கு அழைத்து செல்வதை இஸ்ரேலில் உள்ள பலரும் உணருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் இர்சாத் பிரிக் இஸ்ரேல் ஊடகம் மாரியூல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையில் அவர் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஒரு கடும் எச்சரிக்கை விட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின்மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுக்குமேயானால் அது இஸ்ரேலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். வடக்கு இஸ்ரேலில் உள்ள சில அரசியல் தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தை தூண்டிவிடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லாமீது போர் தொடுத்தால் அது இஸ்ரேலுக்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இஸ்ரேலியா பாதுகாப்பு அமைச்சர் கேளன்டும் படை தளபதி எல்வியும் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிஸ்புல்லாவுடன் யுத்தம் நடந்தால் இஸ்ரேல் ராணுவத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் லெபனான்மீது யுத்தத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. வடக்கு இஸ்ரேல் நகரங்களில் உள்ள மேயர்களுக்கு சமீபத்தில் அவர் விட்டுள்ள ஒரு அறிக்கையில் மிகக் கடினமான காலத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஹிஸ்புல்லாவுடன் போரிட்டு வெல்வது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல என்பதை அவர் அறிக்கையே நமக்கு சூசகமாக தெரிவிக்கிறது. 1948 இஸ்ரேல் என்ற நாடு போருடன் உருவானது. 2024 இஸ்ரேல் போரினால் அழியப்போகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

ஹமாஸின் புதிய போர் முறை

இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து இதுநாள் வரை நடத்தி வந்த வழக்கமான ஒரு முறையை கைவிட்டு புதிய போர்முறையை ஹமாஸ் போராளிகள் யுத்த களத்தில் கடைப்பிடித்து வருவதாக இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தொலைக்காட்சி இன்றைய தினம் செய்தி ஒளிபரப்பியுள்ளது. ஹமாஸின் இந்த புதுமுறை போரைப் பற்றி விமர்சிக்கையில் இது ஒருவகையான கிளர்ச்சி போர் முறை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவை எதிர்த்து ஆப்கானிஸ்தானிலும் வியட்நாமிலும் இவ்வகையான போர்முறை கடைப்பிடிக்கப்பட்டது. எதிரிக்குத் தெரியாமல் மறைந்திருந்து அதிரடி தாக்குதல், எதிரி முகத்தில் குத்துவிட்டு எதிரி கண்ணை திறப்பதற்குள் மறைந்து விடுதல், எதிரியைப் பார்த்து ‘‘ரா… ரா… சரசுக்கு ரா… ரா…’’ என்று எதிரியின் உணர்ச்சியை கிளறிவிட்டு சுரங்கத்திற்குள் இழுத்து ‘‘ரா… ரா… சாவுக்கு ரா… ரா…’’ என்று சோக கானம்பாடி எதிரியை கதம் பண்ணுவது, கட்டிடத்திற்குள் மறைந்திருந்து எதிரியின் கண்ணில்பட்டு ஓடுவதைப்போல பாவனை செய்து எதிரியை கட்டிடத்திற்குள் இழுத்து, கட்டிடத்திற்குள் நுழைந்ததும் குண்டு வைத்து கட்டிடத்தை தகர்த்து உயிரோடு கபர் கட்டுவது இவ்வாறு பல பல புதிய போர் முறைகளை கையாண்டு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போரிட்டு வருவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சனம் செய்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஹமாசின் 50 சதவிகித போராளிகளை அழித்து விட்டதாக கூறிவருகின்றன. ரைட்டர் செய்தி ஸ்தாபனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது தற்சமயம் ஹமாஸிடம் ஒன்பதாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் வரை போராளிகள் இருப்பதாக தெரிவித்தனர். இந்த இழப்பினால்தான் ஹமாஸ் போராளிகள் வழக்கமான போர் முறையை கைவிட்டு கிளர்ச்சி முறை போரை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில் கிளர்ச்சி முறை போரின் மூலம் போராளிகளால் பல மாதங்கள் நீண்ட நெடிய போர் செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ஹமாஸுக்குத் தேவையான ஆயுதங்கள், சுரங்கங்கள் வழியாக தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரேல் வீசிய வெடிக்காத குண்டுகளை எடுத்து இஸ்ரேல் ராணுவத்தின்மீது வீசி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதிநவீன ஆயுதங்களையும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக உபயோகித்து வருவதாகவும் ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் கையாளும் ராணுவ யுக்திகளை ஹமாஸ் மற்றவர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவ ஊடகப் பேச்சாளர் பீட்டர் லோனார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஹமாஸை அழிப்பதில் நாங்கள் வெகுதூரம் உள்ளோம் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு ஹமாஸ் போராளியையும் தேடிப்பிடித்து கொல்லுவது ஒவ்வொரு சுரங்கத்தையும் அழிப்பது என்பது இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் அல்ல என்று கூறினார். ஹமாஸின் ஆளுமையையும் அதிகாரத்தையும் இல்லாமல் செய்வதே இஸ்ரேல் ராணுவத்தின் குறிக்கோள் என்று அவர் தெளிவுபடுத்தினார். ஹமாஸை அழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் ராணுவமே ஒப்புக்கொண்டுள்ளதை இவர் பேட்டி தெரிவிக்கிறது. இஸ்ரேல் ராணுவம் அப்பாவி மக்களை கொல்வதில் சூரப்புலிகள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

தொடரும்..

 

(கே.டி. கிஸர் முஹம்மது)

நன்றி: மணிச்சுடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *