வவுனியா தமிழ்க்கலவன் பாடசாலையிலிருந்து 7 பேர் பல்கலைக் கழக நுழைவிற்கு தகுதி.
வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, வவுனியா – இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் 3 பாடங்களிலும் அதி சிறப்புச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற அஜந்தன் தனுசன் என்ற மாணவரும், கலைப்பிரிவில் கல்வி பயின்ற சபீனா சிவகுமார் என்ற மாணவியுமே இவ்வாறு “3ஏ” அதி சிறப்புச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையிலிருந்து இம்முறை வர்த்தகப் பிரிவிலிருந்து 5 பேரும், கலைப் பிரிவிலிருந்து 14 பேருமாக மொத்தம் 19 பேர் இப்பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், இதில் 7 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில், வர்த்தகப் பிரிவில் பிரதீபன் மதுராங்கன் (ஏசீபீ), ஜெய்கீசன் சஞ்சுதன் (ஏபீசீ), டிலானி கேதீஸ்வரன் (பீசீ2) மற்றும் கலைப் பிரிவில் ஜதுஷா மோகன்ராஜ் (பீ2ஏ), சங்கவி சிவகணேஷ் (சீ2பீ) ஆகிய மாணவ மாணவிகளும் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள குறித்த ஏழு மாணவ மாணவிகளும், இப்பாடசாலைக்கும், அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கும், தமது பெற்றோர்களுக்கும் பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்துள்ளனர் எனவும், இவர்களது இச்சிறப்பு வெற்றிக்கு பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரினதும் கூட்டு முயற்சியே பிரதான காரணமாகும் எனவும், அதிபர் திரு. மாணிக்கம் அரிபூரண நாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )