கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க பொருளாளர் முகம்மது ராஸிக் காலமானார்..!
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க பொருளாளரும், யஹலதன்னை குருகம தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளருமான, அல்ஹாஜ் முகம்மது ராஸிக் (வயது 62) யஹலதன்னையில் இன்று (08.06.2024) காலமானார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர், பிரபல சமூக சேவையாளருமாவார். மத்திய மாகாணத்தில் புகழ்பெற்ற தொழிலதிபரான காலஞ்சென்ற அப்துர் ரஹ்மான் லெப்பை தம்பதியின் புதல்வரான இவர், முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா, இன்று சனிக்கிழமை (08/06/2024) இரவு 10 மணிக்கு, யஹலதென்னை ஜுமுஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
(பேருவளை பீ.எம். முக்தார்)