உலக சுற்றாடல் தினத்தினையொட்டி கல்முனை RDHS வளாகத்தில் சிரமதானமும் மரநடுகையும் முன்னெடுப்பு
உலக சுற்றாடல் தினம் மற்றும் தேசிய சுற்றாடல் வாரத்தினையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகையும் சிரமதான நிகழ்வும் புதன்கிழமை (05) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய பணிமனை வளாகம் சிரமதானம் செய்யப்பட்டதுடன் மர நடுகையும் இடம்பெற்றது. இதேவேளை மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள பிராந்திய உயிரியல் மருத்துவப் பிரிவு வளாகத்திலும் மரநடுகை நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.
(பாறுக் ஷிஹான்)