ஆப்கானின் பந்துவீச்சில் நிலை குலைந்த நியூஸிலாந்துக்கு மிகமோசமான தோல்வி.
9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் 14ஆது லீக் ஆட்டத்தில் பலமிக்க நீயுஸ்ரீpலாந்து அணியை சகலதுறை அசத்தலால் சுருட்டி எடுத்த ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் மிக இலகுவான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
பரோவிடன்ஸ் ஸ்டேடியன்ஸ் கயானாவில் இடம்பெற்ற 9ஆவது உலகக்கிண்ணத் தொடரின் 14ஆவது லீக் ஆட்டம் குழு சீ இல் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி அதிகாலை 5 அணிக்கு ஆரம்பித்திருந்தது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தப்பை தேர்வு செய்திருந்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மதுல்லாஹ் குர்பாஸின் அரைச்சதம் மற்றும் இப்ராஹிம் சத்ரானுடன் இணைந்து முதல் விக்கெட்டில் பெற்று கொண்ட சதம் கடந்த இணைப்பாட்டம்கைகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. குர்பாஸ் 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இப்ராஹிம் சத்ரான் தன் பங்கிற்கு 44 ஓட்டங்களை விளாசியிருந்தார். பந்துவீச்சில் போல்ட் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் எட்டக்கூடிய 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நியூஸிலாந்து அணி சார்பில் எந்த வீரரும் நிலைத்திருந்து விளையாடத் தவறினர். மாறாக மிரட்டலான பந்து வீச்சில் அசத்திய பரூக்கி மற்றும் ரஷீட்கான் ஆகியோரினால் நியூஸிலாந்து அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 84 ஓட்டங்களால் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. துடுப்பாட்டத்தில் க்ளன் பிலிப்ஸ் மாத்திரம் 18 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் பசால்ஹக் பரூக்கி மற்றும் ரஷீட்கான் ஆகியோர் தலா 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விவிக்கெட்டுக்கள் வீதம் அள்ளிச் சுருட்டினர்.