கிழக்கு மாகாணத்திற்கான விடயத்திற்கான விஷேட வைத்திய நிபுணராக Dr. S.D.M. மாஹிர் நியமனம்..!
காத்தான்குடி அரச கால் நடை வைத்தியராகவும், அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளராகவும் கடமை புரிந்த Dr.S.D.M.மாஹிர் அவர்கள் 05.06.2024 அன்று கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விடயத்துக்கான விஷேட வைத்திய நிபுணராக நியமனம் பெற்று கடைமைகளைப் பொறுப்பேற்றார்.இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார சேவையின் தரம் 1 இற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட மேற்படி பதவிற்கான போட்டிப் பரீட்சையில் முதலாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டு இவ் நியமனம் வழங்கப்பட்டது.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)