விளையாட்டு

மீண்டும் மாகாண மட்டப் போட்டிகளில் தடம் பதிக்கும் மிணுவான்கொடை அல் அமான் உதைப்பந்தாட்ட அணிகள்.

மிணுவாங்கொடை வலயமட்ட 18 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்எலிய அலிகார் தேசிய பாடசாலை அணியுடன் 2:1 என்ற பெனால்ட்டி கோல்களின் அடிப்படையில் போராடித் தோற்ற மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2ஆம் இடத்தினைப் பெற்றதுடன் மாகாண மட்டப் போட்டிக்கும் தெரிவாகியது. அத்துடன் இப்பாடசாலையின் 16 வயதிற்குற்பட்ட அணியும் மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நடப்பு ஆண்டுக்காண மிணுவாங்கொடை வலய மட்ட போட்டிகள் தற்சமயம் ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றன. அதற்கமைய கடந்த (05,06) ஆகிய இரு நாட்களாக இடம்பெற்ற 18 பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பதாட்ட போட்டித் தொடரில் முதல் சுற்றில் பொரலுபிட்டிய பாடசாலை அணியை வீழ்த்தியதுடன் 2ஆம் சுற்று போட்டியில் மினுவான்கொடை ஜனாதிபதி கல்லூரியை வீழ்த்தி மிணுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. அதற்கமைய அரையிறுதிப் போட்டியில் பலமிக்க மீரிகம எ.எஸ். சேனநாயக்க கல்லூரி அணிக்கு இலகு வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி.

இதற்கமைய ஹுனுமுல்ல சீ.டபில்யூ. டபில்யூ. கன்னங்கரா மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பலமிக்க கல்எலிய அலிகார் தேசிய பாசாலை அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பிற்குப் பஞ’சமஜல’லாமல’ செல’ல இரு அணிகளாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போக முதல்பாதி கோலின்றி சமநிலை பெற்றது.

பின்னர் இடம்பெற்ற தீர்மானமிக்க 2ஆம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தமது பாடசாலையின் வெற்றிக்காக முனைப்போடு வெற்றி கோலுக்கான போராட்டத்தில் தீவிரம் காட்டினர். இருப்பினும் முழு நேர ஆட்டம் நிறைவடைய எந்தவித கோல்களும் இரு அணியாலும் உட்செலுத்தப்படாமல் போக ஆட்டம்சமநிலை பெற்றது. இதன் விளைவாக வெற்றியாளரை தீர்மாணிக்க பெனால்டி உதை வழங்கப்பட இதில் கல்எலிய அலிகார் தேசிய பாடசாலை அணி 2:1 என்ற பெனால்டி கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவானது.

மேலும் நேற்று நிறைவு பெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் இறுதிப் போட்டி முழுநேர ஆட்டம் மற்றும் பெனால்டி உதைகள் என்பன சமநிலை பெற வெற்றியாளரைத் தீர்மானிக்க நாணயச்சுழற்சி இடம்பெற்று அதில் தோற்றுப் போன அல் அமான் 2ஆம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண மட்டப் போட்டிக்கு தன் வரவை உறுதிப்படுத்தியது. அத்துடன் இன்றைய தினம் இபபோட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன் , உபைதுல்லாஹ்- மிணுவாங்கொடை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *