பிறை தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு.
புத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமை (06) மாலை 04 மணியிலிருந்து 06 மணி வரை புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியில் ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளி பிறை குழுவின் உதவி செயலாளர் அஷ்ஷேய்க் அப்துர் ரஹ்மான் (ஹிலாலி)அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.நோன்பு மற்றும் ஹஜ்ஜுடைய காலங்களில் பிறை சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்ந்து கொள்வதற்கும், உலமாக்கள், மத்ரஸா உஸ்தாத்மார்கள், மத்ரஸா விடுகை வகுப்பு மாணவர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
