உள்நாடு

தம்பதெனிய அல் ஹிஜ்ராவிலிருந்து முதன்முறையாக ஐந்து பேர் தேர்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய நகரில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிரிஉல்ல தம்பதெனிய அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயம், அதன் 75 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இவ்வருடம் இவ்வித்தியாலயத்திலிருந்து முதன் முறையாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவிகளில் ஐந்து பேர் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்பிரகாரம், மாணவிகளான எஸ்.எப். ருஷ்தா (3ஏ), எம்.எப். லீனா ஜெஸ்மின் (ஏ 2பீ), எஸ்.ஏ.பீ.பீ.பீ. சுமணசேகர (3பீ) ஆகியோர் பல்கலைக்கழகங்களுக்கும், ரீ.எப்.எப். ரமீஸா (ஏ 2சீ), எம்.எஸ்.எப். நிப்லா (2சீ எஸ்) ஆகிய மாணவிகள் கல்விக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வித்தியாலய ஆசிரியர்கள், வித்தியாலய சமூகத்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரினதும் கூட்டு முயற்சியே வரலாற்றில் பெற்ற இவ்வெற்றியாகும் என, அதிபர் சிபானா சனூன் பாராட்டிப் பேசினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *