உள்நாடு

உயர்தரப் பரீட்சையில் கல்லொழுவை அல் அமானில் 11 மாணவிகள் தேர்வு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 11 மாணவிகள் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதில், எம்.ஜே.எப். அஸ்மா (3ஏ), ஜே.எஸ்.எப். ஷரபா (3ஏ), எம்.எம்.எப். இல்மா (2ஏ பீ), எம்.எப். ஆதிகா (ஏபீசீ), எம்.ஆர்.எப். நபீலா (2ஏ சீ), எம்.ஆர்.எப். நபீஹா (ஏ 2பீ), எம்.என்.எப். ஆயிஷா (2ஏ சீ), எம்.என்.எப். திக்ரா (ஏ 2பீ), ஆகிய மாணவிகள் கலைப் பிரிவிலும், எம்.ஆர்.எப். ருகையா (ஏ 2பீ), எம்.ஆர்.எப். அப்ரா (ஏ 2சீ), எம்.என்.எப். பௌஸா (ஏ 2சீ) ஆகிய மாணவிகள் வர்த்தகப் பிரிவிலும் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று, வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தெரிவித்துள்ளார்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *