உள்நாடு

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதியை பெற்றிருக்கும் மாணவ, மாணவியரை கௌரவிக்கும் நிகழ்வு..!

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் 2024 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதியை பெற்றிருக்கும் மாணவ, மாணவியரை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) காலை பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உப அதிபர்கள், வர்த்தக மற்றும் கலைப்பிரிவுக்குரிய பகுதி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் கலைப்பிரிவில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல மாணவ, மாணவியர் பல்கலைக்கழக நுழைவுகளை பெற்று தொடர்ந்தும் சாதனை படைத்துவரும் நிலையில், இந்த வருடம் முதல் வர்த்தக பிரிவும் சிறந்த பெறுபேற்றினை பெற்று இந்த வெற்றிப்பயணத்தில் இணைந்திருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் நுரைச்சோலை ஜும்ஆ பள்ளியின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தின் அணுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்ட விஷேட வணிக செயற்திட்டமும் இதற்கு ஒரு காரணியாகும்.

இந்த செயற்திட்டத்தின் மூலம் AAT கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ள இந்த மாணவர்களில் பலர் தற்போது பல்கலைக்கழக நுழைவுகளையும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தகத்தாகும்.

இந்த செயற்திட்டத்திட்டத்திற்கும் மாணவர்களின் அடைவுகளுக்கும் பாடசாலையின் வர்த்தக பிரிவு ஆசிரிய ஆசிரியைகளும் பாரிய பங்களிப்பை செய்திருந்தனர்.

மாணவர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில் அதிபர், உப அதிபர், பகுதி தலைவர்களின் உரைகள் இடம்பெற்றதோடு கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நினைவுப்பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *