உலகம்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம் டெல்லி (AUD) இல் சர்வதேச மாணவர்களுக்கான புதிய அனுமதிகள் ஆரம்பம்..!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம் டெல்லி (AUD) ஆனது 2024-25 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான UG & PG அனுமதிகளை திறந்திருக்கிறது..

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம் டெல்லி (AUD) தனது கல்விசார் பாண்டித்தியம், ஆராய்ச்சி, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் உள்ளடங்கலான கற்கை நெறிகள் என்பவற்றுக்காக அறியப்படுகிறது. இது பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட UG & PG திட்டங்களை வழங்குகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் முழு திறனையும் வளர்த்துக்கொள்ள ஒரு செயல்திறன் மிக்க மற்றும் அறிவார்ந்த தூண்டுதல்கள் நிறைந்த ஒரு சூழலை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களுக்கு 2024-25 கல்வி அமர்வுக்கு UG & PG அனுமதிகள் திறந்திருப்பதை AUD அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

வருங்கால சர்வதேச மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://audfsradmission.samarth.edu.in/ இல் சமர்ப்பிக்கலாம். UG & PGக்கான ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 15 ஜூன் 2024 ஆகும்.

அனுமதிகள் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, ஆர்வமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தை [email protected] எனும் வலைத்தளத்தில் அணுகலாம். மேலதிக தகவல்களுக்கு மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://aud.delhi.gov.in/admission/Foreign) பார்வையிடலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *