Uncategorizedவிளையாட்டு

இலங்கை இளையோர் தேசிய அணியில் இணைய உங்களுக்கும் வாய்ப்பு.

இலங்கை 20 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நேபாளத்தில் இடம்பெறவுள்ள 20 வயதிற்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகள் (SAFF under-20 championship) மற்றும் 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான தகுதி சுற்று என்பவற்றுக்கான (AFC under 20 Asia cup 2025 Qualifiers) இலங்கை அணியினைத்தெரிவு செய்வதற்காக இந்த வீரர்கள் தேர்வுகள் இடம்பெறுகின்றன.

இரு கட்டங்களாக இடம்பெறும் இந்த தேர்வின் முதல் கட்டத்திற்காக 2005, 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் பிறந்த வீரர்களினை தேசிய அடையாள அட்டை (National Identity Card) மற்றும் பிறப்பு சான்றிதழுடன் (Original Birth Certificate) தங்களது மாவட்டங்களிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தினங்களில் உரிய மைதானங்களில் பங்கெடுக்குமாறு கால்பந்தாட்ட சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

முதலாம் கட்டத் தேர்வில் தெரிவு செய்யப்படுகின்ற வீரர்கள் கொழும்பில் இடம்பெறும் இறுதிக்கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். திறமையுள்ள இளைய வீரர்கள் தேசிய கால்பந்து அணியில் இணைந்து கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளவும்..

தேர்வு இடம்பெறும் திகதியும் இடங்களும்.


(அர்ஷத் அன்வர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *