உள்நாடு

அரச கரும மொழிகள் தேர்ச்சி கற்கைநெறி நிறைவு விழா-2024

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 150 மணித்தியாலய சிங்கள மொழி தேர்ச்சி கற்கைநெறியின் நிறைவு விழா அண்மையில் (02) கற்கைநெறியை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்கள் குழுவினால் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டார்.

இக் கற்கை நெறியினை பல்துறை சார்ந்த 109 அரச உத்தியோகத்தர்கள் கற்றுக் கொண்டதுடன், இவ் நிறைவு விழாவில் கல்வி பயின்ற அரச உத்தியோகத்தர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இக்கற்கை நெறியினை வழங்கிய அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளர் ஏ.எச்.நாஸிக் அகமட் இற்கு நினைவுச் சின்னங்களும் பரிசுப்பொதிகளும் கற்கைநெறியில் பங்கு கொண்ட அரச உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளருக்கும், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கற்கை நெறியினை முழுமையாக நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல வசதிகளையும் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே.எம். ரிம்ஸான் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இக்கற்கை நெறி நிறைவு விழாவில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *