சீனன்கோட்டை யிலிருந்து 200 க்கும் அதிகமானோர் ஹஜ் பயணம்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இவ்வருடம் (2024) பேருவளை சினன்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 200க்கும் அதிகமானோர்கள் மக்காவுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு புனித ஹஜ் கடமையை மேற்கொள்ள செல்லும் முதல் கட்ட ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வு பாஸியா பெரிய பள்ளிவாசலில் (2-6-2024) இரண்டாம் திகதி இடம்பெற்றது. ஹஜ் கடமையை மேற்கொள்வோர் பல முகவர் நிலையங்களினூடாக கட்டம் கட்டமாக செல்லவுள்ளனர். கடைசி குழுவினர் 9 திகதி பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
துஆப் பிரார்த்தனையின் பின்னர் ஹஜ்ஜாஜிகள் பயணமாகினர். சினன்கோட்டை பாஸியா பள்ளிவாசல் இமாம் மௌலவி அஹம்மத் முபாரக் (முன்பு) பள்ளிச் சங்க இணைச் செயலாளர்களான எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார்,ரம்ழான் அரூஸ் உட்பட உறுப்பினர்கள்,ஊர்மக்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
சீனன் கோட்டையில் இருந்து ஒவ்வொரு வருடமும் அதிகமானவர்கள் புனித ஹஜ் கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)