விளையாட்டு

உகண்டாவை சல்லடையாக்கிய ஆப்கானுக்கு அசத்தல் வெற்றி.

தமது மிரட்டலான பந்துவீச்சினால் கத்துக்குட்டி உகண்டா அணியை திணறடித்த ஆப்கானிஸ்தான் அணி 58 ஓட்டங்களுக்குள் சுருட்டி 125 ஓட்டங்களால் இமாலய வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடர் தற்சமயம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்றது. இதில் இன்று இலங்கை நேரப்படி காலை 6 அணிக்கு மேற்கிந்தியத் தீவுகளின் கயானா நகரில் இடம்பெற்றது.

இப்பேர்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உகண்டா அணி முதலில் களத்தப்பை தேர்வு செய்தது. இதற்கமைய களம்நுஐழந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களான ரஹ்மதுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஜோடி அசத்தலான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. இவ்விருவரும் தத்தமது அரைச் சதங்களை பதிவு செய்து தமக்கிடையில் 154 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க இப்ராஹிம் சத்ரான் 70 ஓட்டங்களுடனும், குர்பாஸ் 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மசாபா மற்றும் கையூட்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

பின்னர் 184 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த உகண்டா அணிக்கு ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான பஸால் பரூக்கி இடையூரு கொடுத்தார். இதனால் உகண்டா அணி துடுப்பாட்ட வீரர்கள் தொடராக பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் அவ் அணி ரி20 உலகக்கிண்ணதொடரில் ஒரு அணி பெற்றுக் கொண்ட மிகக் குறைந்த ஓட்டங்கள் என்ற மிக மோசமான சாதனையை பதிவு செய்து 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திர்ம பெற்று 125 ஓட்டங்களால் மிகப் பெரிய தோல்வியை பதிவு செய்தது.

துடுப்பாட்டத்தில் ரொபின்ஸன் ஒபியா அதிகபட்சமாக 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பரூக்கி 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாகவும் பரூக்கியே தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *