உள்நாடு

மாத்தளை, தோட்டப்புற மக்களின் வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை      -பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூறைகளை புணரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு தினைக்கலத்தின் ஊடாக முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்பு பணிகளை  இரண்டு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் மிக நீண்ட கால தேவையாக கருதப்படும் மேற்படி வேலை திட்டத்தை முன்னெடுத்து தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, பின் தங்கிய மற்றும் தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்   தங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி அமைச்சர், இதற்கமையவே  இந்த வேலை திட்டத்தை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக இரண்டு மாத காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் கௌரவ எம். சிவஞானம் உட்பட ரத்தோட்டை மற்றும் அம்பன் கோறளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *