கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக கடமைப் பொறுப்பேற்றார் M. M. M. நவ்ப்.
கல்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய M. I. M. அஸ்ரபு அலி ஓய்வு பெற்றுச் சென்றமையால் கல்பிட்டி கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய M. M. M. நவ்ப் கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் தீப்தி பர்ணாந்து முன்னிலையில் இன்றைய தினம் (3) அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக கடமைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான M. M. M. நவ்ப் 27 வருட ஆசிரியர் சேவையில் கடமையாற்றி வருவதோடு 13 வருடங்கள் கல்பிட்டி கல்வி வலயத்திற்குட்பட்ட கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி அனுபவம் கொண்டவராவார். மேலும் இவர் கல்பிட்டி பிராந்திய அதிபர் சங்கத்தின் பொருளாராகவும் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுவில் ஒய்வு பெற்ற அதிபர் அஸூரபு அலி தலைமையில் கோட்டக்கல்வி பணிப்பாளர் தீப்தி பர்ணாந்து, கோட்டக்கல்வி உத்தியோகத்தர் கொசானி, தில்லையூர் மற்றும் குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் வித்தியாலயங்களின் அதிபர்களான S. M. அரூஸ் kw;Wk; A.M.நவ்பாத்,மேலும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பாடசாலையின் பெற்றோர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ரிஸ்வி ஹூசைன்- கல்பிட்டி)