உள்நாடு

நீர் விநியோக தடங்கல் தொடர்பான அறிவித்தல் .

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பாவனையாளர்களுக்கான அறிவித்தல், நிலவுகின்ற மோசமான வானிலையால் மத்துகம துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த மின்கம்பிகளில் மரங்கள் விழுந்திருப்பதனால் கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொலேமோதர நீர் உள்ளேந்து பிரதேசத்திற்கான மின்சாரமானது நேற்று (22.05.2024) பிற்பகல் 04.30 லிருந்து தடைபட்டுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

இலங்கை மின்சார சபையானது குறித்த பழுதுபார்க்கும் பணியை விரைந்து ஆரம்பித்துள்ளதுடன், இன்று (23.05.2024) பிற்பகல் 04.30 அல்லது அதற்கு முன்னர் குறித்த பணியானது நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பின்வரும் பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

• களுத்துறை
• மத்துகம
• வாதுவ
• பேருவளை
• அளுத்கம

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் நிலவுகின்ற நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள பிரதேசங்களுக்கான நீர் விநியோகமானது பாதிக்கப்பட்ட்டுள்ளது.

• கலகெதர
• பூஜாபிட்டிய
• பெந்தோட்டா
• மஸ்கெலியா
• அவிசாவளை
• எல்பிட்டிய
• அம்பிட்டிய
• ஹரிஸ்பத்துவ
• மாரஸ்ஸான
• அம்பலாங்கொட
• மாவத்தகம
• மாவனல்லை
• பம்பஹின்ன
• யட்டியந்தோட்டை
• பொக்காவல
• மெதவல
• ஹெதெனிய
• நுகவல
• குலுகம்மான
• முல்லப்பிஹில்லா
• மீக்கனுவ
• சாலாகம (யதாவத்தை)

குறித்த நீர் விநியோக தடங்கலினால் ஏற்பட சிரமத்திற்கு வருந்துவதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு நீர் வழங்கலை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் சபையானது தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையானது தனது தொடர் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதனால் எம்மால் விரைவில் நீர் வழங்கலினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, பாவனையாளர்கள் அனைவரும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும், அடிப்படைத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இது தொடர்பில் தங்களது ஒத்துழைப்பிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி.

தகவல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *