உள்நாடு

மிலிந்த மொரகொடவின் மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் நுால் விமர்சனம்..!

ஒருவருடைய அனுபவமே அவர் யார் என்பதை எடுத்துக்காட்டிவிடும் என்பதற்கு ஒப்ப இலங்கையில் கல்வி மற்றும் அரசியல் துறை சார் அனுபவங்களை தன்னகத்தே வைத்துள்ள சிறந்ததொரு பொருளாதார நிபுணராக தமிழ் பேசும் வாசகர்களுக்குள் தடம் பதித்துள்ளவராக மிலிந்த மொரகொட என்னும் ஒரு சரித்திர நாயகனை அடையாளப்படுத்த விளைகின்றேன்.
மிலிந்த மொரகொடவின் வயதுக்கும் எமக்கும் பல ஆண்டுகள் வித்தியாசம் காணப்பட்டாலும் எழுத்தெனும் ஆயுதத்தின் கூர்மையும்,தமிழ் தேன் மொழியில் அவரது புதிய மலரும் யுகத்திற்கு என்னும் தலைப்பிட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள நுாலின் உள்ளடக்கமும் எமக்கும் ஒரு வாசகர் என்பதை தாண்டி விமர்சகர் என்ற தரத்திற்கு உயர்த்தியுள்ளது.
இலங்கை அரசியலில் பல பரிணாமங்களை பெற்றது மட்டுமல்லாமல் தமது கல்வியுடன் அன்றாட மக்களின் செயற்பாடுகளுக்குள் அனுபவத்தை இரண்டரக் கலக்கச் செய்த ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கினார்.நாட்டினதும்,சர்வதேசத்தினதும் அபிவிருத்திகளும்,அதற்கான தடைகளை கலைவது தொடர்பில் ஆக்கத்திறன் கொண்ட கருத்துக்களை மிலிந்த மொரகொட அவ்வப்போது தெரிவித்தமையானது அவரது சில எதிர்வு கூறல்கள் நிகழ்காலத்தில் கண்கூடாக உள்ளது.
கொழும்பு மாவட்ட மக்கள் தமது பிரதி நிதியாக மிலிந்த மொரகொட என்னும் ஒரு பலத்தை பெற்றது மற்றுமல்லாமல் ஆட்சியில் இருந்த அரசுகளுக்கு மிலிந்த மொரகொட சின்ம சொற்பனமாக இருந்துள்ளார்.
பொருளாதார ரீதியிலும், இராஜ தந்திர வடிவுகளிலும் இலங்கையை ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன்,இதனை நடை முறைக்கு கொண்டுவருவதில் அவரது ஆழமான சிந்தனை மற்றும் அனுபவம் என்பன போற்றக் கூடியதொன்று .
மிலிந்த மொரகொடவின் அரசியல் வாழ்வுக்கு மற்றுமொரு புதிய பரிணாம வளர்ச்சியாக அவரினால் 53 தலைப்புக்களில் 206 பக்கங்களில் வெளிவந்துள்ள அவரின் கடந்த கால பிரசுரங்களின் தொகுப்பானது இன்றைய பல்துறை கற்பவர்களுக்கு எதிர் கால சுபீட்சமிகு நாட்டிற்கு தேவையானதொரு வழிகாட்டல்களை பதிவு செய்துள்ளது.
இந்த தலைப்புக்களில் அவரின் நோக்கம் தம்மால் முழுமையாக செயற்படுத்த முடியாத எத்தனையோ எண்ணக்கருக்களை பின்வரும் சமூகம் முன்னெடுக்குமா அதற்காக எதனை சமூகத்துக்கு கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் அவரால் சேகரிக்கப்பட்ட அவரின் பொக்கிஷமான மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் மிலிந்த மொரகொட நுால் சமர்ப்பணமாக அமைந்துள்ளதை குறிப்பிடுவது பொருத்தமாகும்.
உண்மையான பிரச்சினை புதிய அரசியலமைப்பு அல்ல என்று ஆரம்பிக்கும் முதலாவது தலைப்பிலேயே அரசியல் என்பது மாற்றத்தின் சிந்தனையல்ல அது மனித மற்றும் சமூக மட்டத்தில் இருந்து உருவாகும் ஒன்றாக இருப்பின் எதிர்பார்க்கும் இலக்கினை நோக்கி நகரலாம் என்ற செய்தியினை சொல்லி நிற்பது ஆரம்பமே அவரது தெளிவான பார்வையின் ஒரு வெளிப்பாட்டை எடுத்துரைக்கின்றது.
இது போன்று இன்னும் எத்தனையோ விடயங்களை மிலிந்த மொரகொட இந்தக் கட்டுரைலகளில் ஒட விட்டிருக்கின்றார்.குறிப்பாக அவரது இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய காலத்தை தொட்டு எழுதியுள்ளமையினை இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் பிரிக்க முடியாத இணைப்பின் வடிவத்தை மிகவும் கட்சிதமாக கருத்துக்களால் இழையோடவிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிமட்டுமல்லாமல் இதனுடன் ஏற்படுத்தப்பட வேண்டிய இணக்கத்துவ பயணத்தின் வெற்றி எங்கு உள்ளது என்பதையும் தமது அனுபவத்தின் மூலம் இனம் கண்டு அதனை தக்க வைக்க வேண்டியது பற்றியும் இக்கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
மிலிந்த மொரகொடவின் இந்த அனுபவமானது பெரும்பான்மை சமூகத்தினருக்கு மட்டும் பொருந்தும் என்பதற்கான காரணமாக அது சிங்கள மொழியில் வெளிவந்தமையேயாகும்.தான் பெற்ற இந்த கல்வி அறிவினை வையகத்தார் பெற வேண்டும் என்ற சிந்தணையின் வெளிப்பாடாகவே ஊடகங்கள் தாங்கி வந்த ஆக்கங்களின் தமிழ் வடிவமாக இதனை கொண்டுவர எண்ணியதுமட்டுமல்லாமல் அதற்கான தளத்தினை மிலிந்தமொரகொட ஏற்படுத்தி இன்று இந்த நுால் வெளிவந்துள்ளது.
இது இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் பாடசாலைகளிலும் இருக்க வேண்டும் என்பது மட்டுல்லாமல் இவ்வாறான சர்வதே துறைசார் அனுபவங்களை கொண்டவர்களின் வழிகாட்டல்களை வைத்து புதிய எழுத்தளார்கள் இதனை உசாத்துணை தகவல் களஞ்சியமாக பயன்படுத்த முடியும் என்பது எமது பார்வையாகும்.
பாத் பைண்டர் பவுண்டேஷன் ( Path Finder Foundation) இதனை வெளியிட்டு வைக்கும் பொறுப்பினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நுால் விமர்சனம்–

சிஷே்ட ஊடகவியலாளர்
தேசமான்ய – இர்ஷாத் றஹ்மத்துல்லா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *