புத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் செல்லும் பாதை திறப்பு தொடர்பாக ஆராய்வு..!
புத்தளம் எழுவன்குளம் ஊடாக மறிச்சிக்கட்டி ,சிலாவத்துறை செல்கின்ற வீதியை மீள் திறப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான கள ஆய்வுக்காக நீதியமைச்சின் விஷேட குழுவொன்று கள ஆய்வில் ஈடுபட்டது. நீதியமைச்சரின் முஸ்லிம் விவகார இணைப்பாளரும் வவுனியா சிறைச்சாலை மேற்பார்வைக் குழுவின் தலைவருமாகிய நிப்ராஸ் முஹம்மத் தலைமையில் இக் குழு மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.இக் குழுவில் நீதியமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் எல்விட்டிகல,வட மாகாண வருமான வரி திணைக்கள தலைவர் சட்டத்தரணி பந்துல, கொழும்பு மாவட்ட சிறைச்சாலை குழு உறுப்பினர் ஹைஸம் உட்பட மேலும் பல பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர் இக் குழுவினர் இப் பாதையை மீளத் திறப்பது பற்றி பிரதேச மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர். இக் கள ஆய்வு தொடர்பான தகவல்களை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதியமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக முஸ்லிம் விவகார இணைப்பாளர் நிப்ராஸ் முஹம்மத் தெரிவித்தார்.