சாய்ந்தமருதில் சமாதான நீதவான் களுக்கான செயலமர்வு..!
சாய்ந்தமருதில் சமாதான நீதவான்களாக செயற்படும் சுமார் 70 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட செயலமர்வு 01.06.2024ம் திகதி சனிக்கிழமை காலை சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் தலைவர் Eng.U.L.M.அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் M.M.அஸீஸ் அவர்களும், விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S.L. சம்சுதீன் அவர்களும், சட்டத்தரணியும் நீதிக்கான மையத்தின் தலைவருமான சௌபி இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டதுடன் சமாதான நீதவான்களின் கடமைகள்,மற்றும் பொது மக்களுடனான தொடர்புகள்,ஆவணங்களை சான்றுபடுத்தும் போது கையாள வேண்டியவைகள், கவனிக்கப்பட வேண்டியவைகள் பற்றி அதிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.
கலந்து கொண்ட சமாதான நீதவான்கள் பலர் சத்தியக் கடதாசி மற்றும் ஆவணங்களை சான்றும் படுத்தல் போன்றவற்றில் ஏற்படும் நடைமுறை சிக்கல் பற்றி சட்டத்தரணி மூலம் தெளிவை பெற்றுக் கொண்டனர்.
முன்னாள் அதிபரும் சிரேஸ்ட சமாதான நீதவானுமாகிய A.M.இப்றாகீம் அவர்கள் சமாதான நீதவான் கடமைகளின் போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சபையில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் ஆசிரிய ஆலோசகரும்,சமாதான நீதவானுமாகிய M.M..றபீக் அவர்களும் உரையாற்றினார்.
ஒன்றியத்தின் சமாதான நீதவானும் செயலாளருமாகிய .M.M.உதுமாலெவ்வை அவர்களால் ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி முன்வைத்தார். கலந்து கொண்ட அனைத்து சமாதான நீதவான்களுக்கு ” சமாதான நீதவான் கடமையும் பொறுப்புக்களும் எனும் கையேட்டு புத்தகமும் வழங்கப்பட்டன.