உள்நாடு

இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் புலமைப் பரிசில்

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2022 ஆம் ஆண்டு சாதாரன தரப் பரீட்சை எழுதி தற்போது உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவர்களிடமிருந்து சிலோன் பைத்துல்மால் நிதியத்தினால் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்.

ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
டிசம்பர் 2022ஆம் ஆண்டு சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றி குறைந்தது 28 புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

சாதாரன தரப் பரீட்சையில் பெற்ற பெறுபேறுகளுக்கு அமைய புள்ளிகள் விபரம்

A – 4 புள்ளிகள்
B – 3 புள்ளிகள்
C – 2 புள்ளிகள்
S – 1 புள்ளிகள்

விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் முறை

முறை 01 : பைத்துல்மால் தலையமையகததில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 02 : விண்ணப்ப படிவங்களை சுய விலாசமிட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உரையை பைதுல்மால் நிதியத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

முறை 03 : [email protected] என்ற முகவரிக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

பைத்துல்மால் நிதியத்தின் முகவரி:

Ceylon Baithulmal Fund
No:44A,
Haig Road,
Bambalapitiya, Colombo-04.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *