தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “மலையகம் 200 தேசிய மாநாடு” கண்டியில்
மலையகத் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் கௌரவமான பிரஜைகளாக வாழ்வதை உறுதிப்படுத்துகின்ற தேசிய மாநாடு
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் “மலையகம் 200 தேசிய மாநாடு” எதிர் வரும் 2ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கண்டியில் இடம்பெறவுள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளாக மலையகத் தமிழ் மக்கள் அனுபவித்த வேதனைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதுடன் விரிவான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றமொன்றின் மூலமாகவே சாதிக்க முடியும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினர் கலாநிதி. பி. பி. சிவப்பிரகாசம் கண்டி டெவோன் ரெஸ்ட்டூரனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
மலையகத்தில் புதிய அரசியல் மாற்றத்திற்காக மக்கள் இணையவுள்ளனர். இந்நிகழ்வில் 1000 பேர் அளவில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்கள். மலையக மக்கள் இலங்கையின் பொருளாதார வளத்திற்கும், சமூக அபிவிருத்திற்கும் ஆணி வேராக இருந்துள்ளார்கள். அவர்களுடைய உரிமைகள் சார்பாக அவர்ளுடைய கௌரவம் சார்பாக அந்த மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைவது சம்மந்தமாக தேசிய மக்கள் சக்தியின் மலையக மாநாடு நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு தேசிய செயற்குழு உறுப்பினர்களான விஜித ஹேரத், லால்காந்த, பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்.
(இக்பால் அலி)