உள்நாடு

DHARGA TOWN TECH PROJECT புதிய மாணவர் அனுமதி விளக்கக் கூட்டம்..!

தர்கா நகர் ரூமி ஹாசிம் பவுண்டேசன் ஸ்தாபகர் டொக்டர் ரூமி ஹாசிமின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக இயங்கி வரும் (DHARGA TOWN TECH PROJECT) ஏற்பாட்டிலான 2026க்கான தமிழ் மொழி மூல ICT,SFT,ET,BST ஆகிய வற்றுக்கான புதிய வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதி தொடர்பான விளக்கக் கூட்டம் எதிர் வரும் 2ம் திகதி (2-6-2024) ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணிக்கு தர்கா நகர் இஷா அத்துல் இஸ்லாம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெறும்.

இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் வெளிப் பிரதேச மாணவ,மாணவிகளுக்கு சிறந்த கற்றல் சூழலுடன் தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரூமி ஹாஷிம் பவுண்டேசன் செயலாளர் எம்.ஜெஸூக் அஹமட் தெரிவித்தார்.

களுத்துறை தொடக்கம் தர்கா நகர் வரை போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதோடு ஆங்கில மொழி மூலம் மாணவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பக் கூட்டத்தில் மேற்படி பவுண்டேஷன் தலைவர் டொக்டர் ரூமி காசிம் உட்பட கல்விமான்கள் பிரமோகர்கள் பங்குபற்றுவர்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *