உள்நாடு

பேருவளை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தரத்துறை வழிகாட்டல் நிகழ்ச்சி “Mission Intellect” என்ற தொனிப்பொருளில் கடந்த 26 ஆம் திகதி பேருவளை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

பேருவளை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பல மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு,அமைப்பின் தலைவர் சகோதரர் சாரிக் அவர்களின் தலைமையில் ,பேருவளை ஸேம்‌ ரிபாய் ஹாஜியார் தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.

இச்சிறப்பு நிகழ்வின் வளவாலர்களாக,அமைப்பின் ஸ்தபாகரும் முன்னாள் தலைருமான இலங்கை இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் ஸாதிக் மற்றும் இளங்கலை பட்டதாரிகளான அப்துல் பாசித் (தொழில்நுட்பம் ), ஹலிஸ் கலீல் ( அறிவியல் ),மர்யம் அன்வர் ஹுசைன் (கலை) ,ரம்லா ரப்கான் (உயிரியல் விஞ்ஞானம் ) அஸ்ரியா அமீன் ( வணிகம்) மற்றும் ஹஷ்மத் ஹனபி ( தொழில் துறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


(பேருவளை – பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *