விளையாட்டு

கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள். – கிரிக்கெட்டின் சம்பியன் பட்டம் கற்பிட்டி அல் அக்ஸா வசமானது.

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவாகி அசத்தியது.

பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் புத்தளம் வலயத்திற்குற்பட்ட கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிமனையின் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடரி; நேற்று (28) மற்றும் இன்று (29) ஆகிய தினங்களில் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஐ.எம். பலீல் தலைமையில் 4 மைதானங்களில் இடம்பெற்றிருந்தது. இதில் சுமார் 20 பாடசாலைகள் பங்கேற்றிருந்தது.

நேற்றைய தினம் இடம்பெற்ற விலகல் முறை முதல் மற்றும் 2ஆம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்தன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் திகழி முஸ்லிம் மகா வித்தியாலய அணியை வீழ்த்திய அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி முதல் அணியாய் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய அணியை வீழ்த்திய பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதற்கமைய இன்றைய தினம் (29) கற்பிட்டி இல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் முடிவில் 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் 65 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணியால் 5 ஓவர்களில் 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றக்கொள்ள முடிந்தமையால் அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் நடப்பாண்டின் கோட்ட மட்ட கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தியது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *