மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி..!
2-ஒரு துறையை தேர்ந்தெடுக்கும்போது எந்தெந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்?
3-நம்பகமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?
4-புலமைப்பரிசில்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது ?
5-எமது பட்டத்துக்கான அங்கீகாரம் என்றால் என்ன, சர்வதேச தரத்தில் அவை இருக்கின்றனவா என எப்படி அறிந்து கொள்வது?
ஆகிய தலைப்புகள் இங்கு சற்று விரிவாக விளக்கப்பட்டன.
விஷேடமாக இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், திறந்த பல்கலைக்கழகம், உள்வாரி, வெளிவாரி பட்டப்படிப்புகள், இலங்கையில் வழங்கப்படும் ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் பற்றியும். அதே போல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, துருக்கி, ஜோர்ஜியா, பெலாருஸ், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, ஐரோப்பா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சர்வதேச தரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை எவ்வாறு அறிந்து கொள்வது அந்த பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் இலங்கை அரசின் UGC, SLMC, MOHE, IESL, Law College ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளனவா என்று எப்படி அறிந்து கொள்வது போன்ற விடயங்களும் இலங்கையில் இருக்கும் தொழிநுட்பக் கல்லூரிகள் வழங்கும் National Vocational Qualifications (NVQ) சான்றிதழ்களின் தரங்கள், Sri Lanka Qualification Framework (SLQF) க்குடன் National Vocational Qualification (NVQ) எவ்வாறு இணைகின்றன, மேலும் பாடநெறிகளின் Credits முறைகள் பற்றியும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன.
அதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் புலமைப்பரிசில்கள், அந்தப் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு எவ்வாறு முகம் கொடுத்து அவற்றை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களும் தெளிவூட்டப்பட்டன.
தற்போது மலிந்து கிடக்கும் போலிப் பல்கலைக்கழகங்கள், போலி கல்வி நிறுவனங்கள், போலிப் பட்டங்கள், ஒன்லைன் பட்டங்கள் , அங்கீகாரமில்லாது பாடநெறிகள் போன்றவற்றில் மாணவர்கள் சிக்கி தமது பணத்தையும், காலத்தையும் வீணாக்கி ஏமாற்றப்படாமல் இருக்கவும், எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்கள் உள்ள பட்டப்படிப்புகளை, இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை தேடிக்கொள்வதற்கான வழிகாட்டல் Webinar நிகழ்ச்சியாகவும் இது இருந்தது.
நன்றி : இக்ரஃ இஸ்லாமிய சங்கம்
ஒருங்கிணைப்பாளர் : ஹரீஸ் ஸாலிஹ்
காணொளி இணைப்பு :
https://fb.watch/skwdoovqX8/