பேருவளை டீ.எம்.ஐ கல்வி நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!
பேருவளை டீ.எம்.ஐ கல்வி நிறுவனம் கடந்த 27 வருடகாலமாக உயர்தர கலை-வர்த்தக பிரவுக்கு அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்பிக்கப்படுவதோடு, க.பொ.த சாதாரண தர வகுப்புகளும் உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியருக்கான ஆங்கில டிப்ளோமா பாடநெறியும் நடைபெற்று வருகின்றது.இந் நிறுவனத்தில் 1997ம் ஆண்டிலிருந்து 2017 ம் ஆண்டு வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வெளிவராத பட்டப் படிப்புக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தும் வகுப்புகளும் நடைபெற்று இதன் மூலம் இப்பிரதேச பாடசாலைகளின் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு டீ.எம்.ஐ கல்வி நிறுவனத்தின் கடந்த 13 வருடங்களாக ஆங்கில டிப்ளோமா பாடநெறி உயர்தர பொது ஆங்கிலம், தரம் 10 மற்றும் சாதாரண தர ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வரும் ஹிஷாம் மகான் ஆசிரியரினால் சாதாரண தர மாணவ மாணவியருக்காக நடாத்தப்பட்ட ஆங்கில டிப்ளோமா பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அன்மையில் ஹிஷாம் மகான் ஆசிரியரின் தலைமையிலும் மேலும் டீ.எம்.ஐ. கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ரிஸ்வான் பாசி அவர்களின் வழிகாட்டலில் பேருவளை காலி வீதியில் அமைந்துள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 195 மாணவ மாணவியர் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பத்மினி டி சில்வா அவர்களும், கெளரவ அதிதியாக எழுத்தாளரும் ஆங்கில ஆசிரியை, கேபுக்ஸ் (KBOOKS) இஸ்தாபகருமான திருமதி கான்சனா பிரியகான்த அவர்களும், விஷேட அதிதிகளாக ஆசிரியர் ஹிஷாம் மாகான் அவர்களின் முன்னாள் டிப்ளமோ மாணவர்களான டாக்டர் முஷப்பா முனாப், இளைஞர் பாரளுமன்ற பிரதி வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் ஸாதிக், முஷாபன் ஹனபி (பீ.ஏ) மற்றும் சான்றிதழ் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர்களின் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
(பீ.எம்.முக்தார் – பேருவளை நிருபர்)