Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

தெமட்டகொடயைச் சேர்ந்த மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் (BSW. Hons) அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

இலக்கம் 15, வேலுவன வீதி, தெமட்டகொடை, கொழும்பு 09 எனும் முகவரியை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றும (28) மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர், தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரியாவார். அத்துடன் வக்பு நியாய சபையின் பதில் செயலாளராகவும் கடமையாற்றுகிறார்.

சமூகப்பணி இளமானிப் விஷேட பட்டத்தை (Bachelor of Social Work (Hons) – BSW) தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) மூலம் பெற்ற ஒரு பட்டதாரியான இவர், தனது பாடசாலைக் கல்வியை கிரி/அறக்கியாளை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், கிரி/ கெகுணகொல்லை தேசிய பாடசாலையிலும் பெற்றவர்.

அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.நஸார், ஹாஜியானி எம்.எஸ்.டீ.ஹைரியா தம்பதிகளின் மகனான எம்.என்.எம். ரோஸன், சமூக சேவைகளில் சிறு வயது முதல் ஆர்வம் காட்டிவரும் இளம் சமூக ஆர்வலருமாவார்.

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *