கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான வீசேட கூட்டம் நாளை.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிகர்கள் மற்றும் பதில் அதிபர்களுக்கான திறன் அபிவிருத்தி வேலைத்திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நேற்றைய தினம் கல்வியமைச்சு வெளியிட்ட கடிதத்திற்கு அமைய கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பதில் அதிபர்களுக்கான திறன் அபிவிருத்தி வேலைத்திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கொழும்பு 10, சாஹிரா கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இக் கூட்டத்தில் பங்கேற்க வருகையில் பாசாலையின் வேலைத்திட்ட அறிக்கையினையும் எடுத்து வருமாறு அதிபர்கள் மற்றும் பதில் அதிபர்கள் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.