இறக்காமம் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சங்க உருவாக்கமும் நிர்வாகத் தெரிவும்..!
இறக்காமம் பிரதேச கலாசார மத்திய நிலையத்திற்கான அபிவிருத்தி சங்க கூட்டம் (27) உத்தியோகபூர்வமாக இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தலைமை உரை பிரதேச செயலாளரினால் நிகழ்த்தபட்டதுடன் வரவேற்புரையை நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத் நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தில் அபிவிருத்தி சங்கத்திற்கான முதல் நிர்வாகத் தெரிவு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி), கலாசார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.நௌஷாத்,
பிரதேச செயலக நிதி உதவியாளர், கிராம நிலதாரி மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், மத குருமார்கள், மூத்த கலைஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அபிவிருத்தி சங்கத்தின் முதல் செயற்குழுவின் தலைவராக ஏ.பி. நௌஷாத் Officer In-charge) (பதவிவழியாக), செயலாளராக எம்.ஐ. ஜஃபர் (அதிபர், மதீனா வித்யாலயம்), பொருளாளராக எம்.எஸ்.ரிஸ்வான் மௌலவி (Development Officer) (பதவிவழியாக), உப தலைவராக கே.எல். அலியார் (மூத்த கலைஞர்), உப செயலாளராக என்.எம். ஹசான் (விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்) மற்றும்
செயற்குழு உறுப்பினர்களாக, திருமதி எம்.எல். பாத்திமா பர்சானா (FA, பிரதேச செயலகம் இறக்காமம்), திருமதி எம்.எம்.கே. சாஜிதா (WDO- இறக்காமம் பிரதேச செயலகம்), எம்.ஜே.எம். அத்தீக் (கிராம நிலதாரி, இறக்காமம் -03, எம்.எஸ்.லாஹிர் (அதிபர், அமீர் அலி வித்யாலயம்), எம்.எஸ். சமக்கூன் (அண்ணாவியர், கலைஞர்), ஏ.ஆர்.எம்.அலியார் (செயலாளர் – ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் – வரிப்பத்தான்சேனை) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இறுதியாக புதிதாக கலாசார அபிவிருத்தி சங்கத்திக்கு தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ. ஜஃபர் அதிபரினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு, கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)