கற்பிட்டி கோட்டமட்ட வொலிபோல் தொடர். சம்பியன் பட்டத்தை தனதாக்கியது பள்ளிவாசல்துறை மு.ம.வித்தியாலயம்.
கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வொலிபோல் போட்டித் தொடரில் 16 மற்றம் 18 வயதுக்குட்பட்ட போட்டிகளில் பள்ளிவாசல்துறை முஸ்லீம் மகா வித்தியாலய அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தியது.
பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் தற்சமயம் இலங்கை முழுவதும் ஆரம்பித்திருக்கஇ புத்தளம் வலயத்திற்குற்பட்ட கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிமனையின் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் ஆண்களுக்கான 16மற்றும் 18 வயதிற்குற்பட்டவர்களுக்கான வொலிபோல் போட்டி நேற்று (27) மற்றும் இன்று (28) ஆகிய இரு தினங்களாக நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் சுமார் 20 பாடசாலைகள் பங்கேற்றிருந்தது.
அதற்கமைய 16 வயதுக்குற்பட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணியும் , திகழி முஸ்லிம் வித்தியாலய அணியும் தகுதி பெற்றிருந்தன. மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்விறுதிப் போட்டியில் 25:22 மற்றும் 25: 08 என்ற புள்ளிகளுக்கு அமைய 2:0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலய அணி நடப்பாண்டின் சம்பியனானது. அதற்கமைய திகழி முஸ்லிம் வித்தியாலய அணி 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொள்ள, முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய அணி 3ஆம் இடத்திற்குத் தெரிவானது.
பின்னர் இடம்பெற்ற 18 வயதுக்குட்பட்டவற்களுக்கான போட்டியில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணியை சம பலமிக்க முதலைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய அணி இறுதிப் போட்டியில் எதிர்த்தாடியது. இப்போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 25:22 என முதல் செட்டையும் , 25:18 என 2ஆம் செட்டையும் கைப்பற்றிக் கொள்ள 2:0 என்ற நேர் செட்களில் வென்ற பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அணி சம்பியனாக தெரிவானது.
இப்போட்டியில் தோற்ற முதலைப்பாளி முஸ்லிம் மகா வித்தியால 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. பின்னர் இடம்பெற்ற 3ஆம் இடத்துக்கான போட்டியில் அல் அக்ஸா தெசிய பாடசாலை அணி வெற்றி பெற்று 3ஆவது இடத்திற்குத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தின்)