உள்நாடு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பிக்கும் அனுமதி நிறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரச பாடசாலைகள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்க முடியும்.

அத்துடன், 31 ஜனவரி 2025 அன்று 11 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *